முகப்பு
தொடக்கம்
3814
ஆழியான் ஆழி அமரர்க்கும் அப்பாலான்
ஊழியான் ஊழி படைத்தான் நிரை மேய்த்தான்
பாழி அம் தோளால் வரை எடுத்தான் பாதங்கள்
வாழி என் நெஞ்சே! மறவாது வாழ்கண்டாய் (8)