382உச்சியில் எண்ணெயும் சுட்டியும் வளையும் உகந்து
எச்சம் பொலிந்தீர்காள் என் செய்வான் பிறர் பேர் இட்டீர்?
பிச்சை புக்கு ஆகிலும் எம்பிரான் திருநாமமே
நச்சுமின் நாரணன் தம் அன்னை நரகம் புகாள்             (3)