3832என் நெஞ்சத்து உள் இருந்து இங்கு இரும் தமிழ் நூல் இவை மொழிந்து
வல் நெஞ்சத்து இரணியனை மார்வு இடந்த வாட்டாற்றான்
மன் அஞ்ச பாரதத்துப் பாண்டவர்க்காப் படைதொட்டான்
நல் நெஞ்சே நம் பெருமான் நமக்கு அருள் தான் செய்வானே             (4)