முகப்பு
தொடக்கம்
3834
தலைமேல தாள் இணைகள் தாமரைக்கண் என் அம்மான்
நிலைபேரான் என் நெஞ்சத்து எப்பொழுதும் எம் பெருமான்
மலை மாடத்து அரவு அணைமேல் வாட்டாற்றான் மதம் மிக்க
கொலை யானை மருப்பு ஒசித்தான் குரை கழல்கள் குறுகினமே (6)