3835குரை கழல்கள் குறுகினம் நம் கோவிந்தன் குடிகொண்டான்
திரை குழுவு கடல் புடை சூழ் தென் நாட்டுத் திலதம் அன்ன
வரை குழுவு மணி மாட வாட்டாற்றான் மலர் அடிமேல்
விரை குழுவு நறும் துளவம் மெய்ந்நின்று கமழுமே             (7)