3836மெய்ந்நின்று கமழ் துளவ விரை ஏறு திருமுடியன்
கைந்நின்ற சக்கரத்தன் கருதும் இடம் பொருது புனல்
மைந்நின்ற வரை போலும் திரு உருவ வாட்டாற்றாற்கு
எந் நன்றி செய்தேனா என் நெஞ்சில் திகழ்வதுவே?             (8)