3838பிரியாது ஆட்செய் என்று பிறப்பு அறுத்து ஆள் அறக்கொண்டான்
அரி ஆகி இரணியனை ஆகம் கீண்டான் அன்று
பெரியார்க்கு ஆட்பட்டக்கால் பெறாத பயன் பெறுமாறு
வரி வாள் வாய் அரவு அணைமேல் வாட்டாற்றான் காட்டினனே             (10)