384மலம் உடை ஊத்தையில் தோன்றிற்று ஓர் மல ஊத்தையை
மலம் உடை ஊத்தையின் பேர் இட்டால் மறுமைக்கு இல்லை
குலம் உடைக் கோவிந்தா கோவிந்தா என்று அழைத்தக்கால்
நலம் உடை நாரணன் தம் அன்னை நரகம் புகாள்             (5)