3877போர விட்டிட்டு என்னை நீ புறம் போக்கலுற்றால் பின்னை யான்
ஆரைக் கொண்டு எத்தை? அந்தோ எனது என்பது என்? யான் என்பது என்?
தீர இரும்பு உண்ட நீர் அது போல என் ஆர் உயிரை
ஆரப் பருக எனக்கு ஆரா அமுது ஆனாயே                         (5)