388ஊத்தைக் குழியில் அமுதம் பாய்வது போல் உங்கள்
மூத்திரப் பிள்ளையை என் முகில் வண்ணன் பேர் இட்டு
கோத்துக் குழைத்துக் குணாலம் ஆடித் திரிமினோ
நாத் தகு நாரணன் தம் அன்னை நரகம் புகாள்             (9)