முகப்பு
தொடக்கம்
3881
முதல் தனி வித்தேயோ முழு மூவுலகு ஆதிக்கு எல்லாம்
முதல் தனி உன்னை உன்னை எனை நாள் வந்து கூடுவன் நான்
முதல் தனி அங்கும் இங்கும் முழுமுற்றுறு வாழ் பாழாய்
முதல் தனி சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவிலீ ஓ! (9)