39மண்ணும் மலையும் கடலும் உலகு ஏழும்
உண்ணுந் திறத்து மகிழ்ந்து உண்ணும் பிள்ளைக்கு
வண்ணம் எழில்கொள் மகரக்குழை இவை
திண்ணம் இருந்தவா காணீரே
      சேயிழையீர் வந்து காணீரே            (18)