முகப்பு
தொடக்கம்
இடம் கொண்ட நெஞ்சத்து இணங்கிக் கிடப்பன-என்றும் பொன்னித்
தடம் கொண்ட தாமரை சூழும் மலர்ந்த தண் பூங் குடந்தை
விடம் கொண்ட வெண் பல் கருந் துத்தி செங் கண் தழல் உமிழ்வாய்
படம் கொண்ட பாம்பு-அணைப் பள்ளிகொண்டான் திருப்பாதங்களே