391சலம் பொதி உடம்பின் தழல் உமிழ் பேழ்வாய்ச்
      சந்திரன் வெங்கதிர் அஞ்ச
மலர்ந்து எழுந்து அணவும் மணிவண்ண உருவின்
      மால் புருடோத்தமன் வாழ்வு
நலம் திகழ் சடையான் முடிக்கொன்றை மலரும்
      நாரணன் பாதத் துழாயும்
கலந்து இழி புனலால் புகர் படு கங்கைக்
      கண்டம் என்னும் கடிநகரே             (2)