393இமையவர் இறுமாந்து இருந்து அரசாள
      ஏற்று வந்து எதிர் பொரு சேனை
நமபுரம் நணுக நாந்தகம் விசிறும்
      நம் புருடோத்தமன் நகர்தான்
இமவந்தம் தொடங்கி இருங்கடல் அளவும்
      இரு கரை உலகு இரைத்து ஆடக்
கமை உடைப் பெருமைக் கங்கையின் கரைமேல்
      கண்டம் என்னும் கடிநகரே             (4)