395 | தலைபெய்து குமுறிச் சலம் பொதி மேகம் சலசல பொழிந்திடக் கண்டு மலைப் பெரும் குடையால் மறைத்தவன் மதுரை மால் புருடோத்தமன் வாழ்வு அலைப்பு உடைத் திரைவாய் அருந்தவ முனிவர் அவபிரதம் குடைந்து ஆடக் கலப்பைகள் கொழிக்கும் கங்கையின் கரைமேல் கண்டம் என்னும் கடிநகரே (6) |
|