396விற் பிடித்து இறுத்து வேழத்தை முறுக்கி
      மேல் இருந்தவன் தலை சாடி
மற் பொருது எழப் பாய்ந்து அரையனை உதைத்த
      மால் புருடோத்தமன் வாழ்வு
அற்புதம் உடைய ஐராவத மதமும்
      அவர் இளம்படியர் ஒண் சாந்தும்
கற்பக மலரும் கலந்து இழி கங்கைக்
      கண்டம் என்னும் கடிநகரே             (7)