397திரை பொரு கடல் சூழ் திண்மதிற் துவரை
      வேந்து தன் மைத்துனன்மார்க்காய்
அரசினை அவிய அரசினை அருளும்
      அரி புருடோத்தமன் அமர்வு
நிரை நிரையாக நெடியன யூபம்
      நிரந்தரம் ஒழுக்குவிட்டு இரண்டு
கரை புரை வேள்விப் புகை கமழ் கங்கைக்
      கண்டம் என்னும் கடிநகரே             (8)