399 | மூன்று எழுத்து அதனை மூன்று எழுத்து அதனால் மூன்று எழுத்து ஆக்கி மூன்று எழுத்தை ஏன்று கொண்டு இருப்பார்க்கு இரக்கம் நன்கு உடைய எம் புருடோத்தமன் இருக்கை மூன்று அடி நிமிர்த்து மூன்றினிற் தோன்றி மூன்றினில் மூன்று உரு ஆனான் கான் தடம்பொழில் சூழ் கங்கையின் கரைமேல் கண்டம் என்னும் கடிநகரே (10) |
|