4அண்டக் குலத்துக்கு அதிபதி ஆகி
      அசுரர் இராக்கதரை
இண்டக் குலத்தை எடுத்துக் களைந்த
      இருடிகேசன் தனக்கு
தொண்டக் குலத்தில் உள்ளீர் வந்து அடிதொழுது
      ஆயிர நாமம் சொல்லிப்
பண்டைக் குலத்தைத் தவிர்ந்து பல்லாண்டு பல்
      லாயிரத்தாண்டு என்மினே             (4)