400பொங்கு ஒலி கங்கைக் கரை மலி கண்டத்து
      உறை புருடோத்தமன் அடிமேல்
வெங்கலி நலியா வில்லிபுத்தூர்க் கோன்
      விட்டுசித்தன் விருப்பு உற்றுத்
தங்கிய அன்பால் செய் தமிழ்- மாலை
      தங்கிய நா உடையார்க்குக்
கங்கையிற் திருமால் கழலிணைக் கீழே
      குளித்திருந்த கணக்கு ஆமே             (11)