401மா தவத்தோன் புத்திரன் போய்
      மறிகடல்வாய் மாண்டானை
ஓதுவித்த தக்கணையா
      உருவுருவே கொடுத்தான் ஊர்
தோதவத்தித் தூய் மறையோர்
      துறைபடியத் துளும்பி எங்கும்
போதில் வைத்த தேன் சொரியும்
      புனல் அரங்கம் என்பதுவே            (1)