403மருமகன் தன் சந்ததியை
      உயிர்மீட்டு மைத்துனன்மார்
உருமகத்தே வீழாமே
      குருமுகமாய்க் காத்தான் ஊர்
திருமுகமாய்ச் செங்கமலம்
      திருநிறமாய்க் கருங்குவளை
பொரு முகமாய் நின்று அலரும்
      புனல் அரங்கம் என்பதுவே            (3)