405பெருவரங்கள் அவைபற்றிப்
      பிழக்கு உடைய இராவணனை
உரு அரங்கப் பொருது அழித்து இவ்
      உலகினைக் கண்பெறுத்தான் ஊர்
குரவு அரும்பக் கோங்கு அலரக்
      குயில் கூவும் குளிர் பொழில் சூழ்
திருவரங்கம் என்பதுவே
      என் திருமால் சேர்விடமே             (5)