407கொழுப்பு உடைய செழுங்குருதி
      கொழித்து இழிந்து குமிழ்த்து எறியப்
பிழக்கு உடைய அசுரர்களைப்
      பிணம் படுத்த பெருமான் ஊர்
தழுப்பு அரிய சந்தனங்கள்
      தடவரைவாய் ஈர்த்துக்கொண்டு
தெழிப்பு உடைய காவிரி வந்து
      அடிதொழும் சீர் அரங்கமே             (7)