409குன்று ஆடு கொழு முகில் போல்
      குவளைகள் போல் குரைகடல் போல்
நின்று ஆடு கணமயில் போல்
      நிறம் உடைய நெடுமால் ஊர்
குன்று ஊடு பொழில் நுழைந்து
      கொடி இடையார் முலை அணவி
மன்று ஊடு தென்றல் உலாம்
      மதில் அரங்கம் என்பதுவே             (9)