416 | மைத்துனன்மார் காதலியை மயிர் முடிப்பித்து அவர்களையே மன்னர் ஆக்கி உத்தரைதன் சிறுவனையும் உயக்கொண்ட உயிராளன் உறையும் கோயில் பத்தர்களும் பகவர்களும் பழமொழிவாய் முனிவர்களும் பரந்த நாடும் சித்தர்களும் தொழுது இறைஞ்சத் திசை-விளக்காய் நிற்கின்ற திருவரங்கமே (6) |
|