423 | சாம் இடத்து என்னைக் குறிக்கொள் கண்டாய் சங்கொடு சக்கரம் ஏந்தினானே நா மடித்து என்னை அனேக தண்டம் செய்வதா நிற்பர் நமன்தமர்கள் போம் இடத்து உன்திறத்து எத்தனையும் புகாவண்ணம் நிற்பதோர் மாயை வல்லை ஆம் இடத்தே உன்னைச் சொல்லி வைத்தேன் அரங்கத்து அரவணைப் பள்ளியானே (2) |
|