426பை அரவின் அணைப் பாற்கடலுள்
      பள்ளி கொள்கின்ற பரம முர்த்தி
உய்ய உலகு படைக்க வேண்டி
      உந்தியிற் தோற்றினாய் நான்முகனை
வைய மனிசரைப் பொய் என்று எண்ணிக்
      காலனையும் உடனே படைத்தாய்
ஐய இனி என்னைக் காக்கவேண்டும்
      அரங்கத்து அரவணைப் பள்ளியானே             (5)