429 | நான் ஏதும் உன் மாயம் ஒன்று அறியேன் நமன்தமர் பற்றி நலிந்திட்டு இந்த ஊனே புகே என்று மோதும்போது அங்கு உன்னை நான் ஒன்றும் நினைக்கமாட்டேன் வான் ஏய வானவர் தங்கள் ஈசா மதுரைப் பிறந்த மா மாயனே என் ஆனாய் நீ என்னைக் காக்கவேண்டும் அரங்கத்து அரவணைப் பள்ளியானே (8) |
|