| 432 | வாக்குத் தூய்மை இலாமையினாலே மாதவா உன்னை வாய்க்கொள்ள மாட்டேன் நாக்கு நின்னை அல்லால் அறியாது நான் அது அஞ்சுவன் என்வசம் அன்று மூர்க்குப் பேசுகின்றான் இவன் என்று முனிவாயேலும் என் நாவினுக்கு ஆற்றேன் காக்கை வாயிலும் கட்டுரை கொள்வர் காரணா கருளக் கொடியானே (1) |
|