435நெடுமையால் உலகேழும் அளந்தாய்
      நின்மலா நெடியாய் அடியேனைக்
குடிமை கொள்வதற்கு ஐயுற வேண்டா
      கூறை சோறு இவை வேண்டுவதில்லை
அடிமை என்னும் அக் கோயின்மையாலே
      அங்கங்கே அவை போதரும் கண்டாய்
கொடுமைக் கஞ்சனைக் கொன்று நின் தாதை
      கோத்த வன் தளை கோள் விடுத்தானே            (4)