436தோட்டம் இல்லவள் ஆத் தொழு ஓடை
      துடவையும் கிணறும் இவை எல்லாம்
வாட்டம் இன்றி உன் பொன்னடிக் கீழே
      வளைப்பு-அகம் வகுத்துக்கொண்டு இருந்தேன்
நாட்டு மானிடத்தோடு எனக்கு அரிது
      நச்சுவார் பலர் கேழல் ஒன்று ஆகிக்
கோட்டு மண் கொண்ட கொள்கையினானே
      குஞ்சரம் விழக் கொம்பு ஒசித்தானே             (5)