438வெள்ளை வெள்ளத்தின் மேல் ஒரு பாம்பை
      மெத்தையாக விரித்து அதன் மேலே
கள்ள நித்திரை கொள்கின்ற மார்க்கம்
      காணலாங்கொல் என்று ஆசையினாலே
உள்ளம் சோர உகந்து எதிர் விம்மி
      உரோம கூபங்களாய்க் கண்ண நீர்கள்
துள்ளம் சோரத் துயில் அணை கொள்ளேன்
      சொல்லாய் யான் உன்னைத் தத்துறுமாறே             (7)