439வண்ண மால் வரையே குடையாக
      மாரி காத்தவனே மதுசூதா
கண்ணனே கரி கோள் விடுத்தானே
      காரணா களிறு அட்ட பிரானே
எண்ணுவார் இடரைக் களைவானே
      ஏத்தரும் பெருங் கீர்த்தியினானே
நண்ணி நான் உன்னை நாள்தொறும் ஏத்தும்
      நன்மையே அருள்செய் எம்பிரானே            (8)