446மாணிக் குறள் உரு ஆய
      மாயனை என் மனத்துள்ளே
பேணிக் கொணர்ந்து புகுத
      வைத்துக் கொண்டேன் பிறிது இன்றி
மாணிக்கப் பண்டாரம் கண்டீர்
      வலி வன் குறும்பர்கள் உள்ளீர்
பாணிக்க வேண்டா நடமின்
      பண்டு அன்று பட்டினம் காப்பே             (5)