448கொங்கைச் சிறு வரை என்னும்
      பொதும்பினில் வீழ்ந்து வழுக்கி
அங்கு ஓர் முழையினில் புக்கிட்டு
      அழுந்திக் கிடந்து உழல்வேனை
வங்கக் கடல் வண்ணன் அம்மான்
      வல்வினை ஆயின மாற்றிப்
பங்கப் படாவண்ணம் செய்தான்
      பண்டு அன்று பட்டினம் காப்பே             (7)