449ஏதங்கள் ஆயின எல்லாம்
      இறங்கல் இடுவித்து என்னுள்ளே
பீதக வாடைப் பிரனார்
      பிரம குருவாகி வந்து
போதில் கமல வன் நெஞ்சம்
      புகுந்து என் சென்னித் திடரிற்
பாத இலச்சினை வைத்தார்
      பண்டு அன்று பட்டினம் காப்பே             (8)