451அரவத்து அமளியினோடும்
      அழகிய பாற்கடலோடும்
அரவிந்தப் பாவையும் தானும்
      அகம்படி வந்து புகுந்து
பரவைத் திரை பல மோதப்
      பள்ளி கொள்கின்ற பிரானைப்
பரவுகின்றான் விட்டுசித்தன்
      பட்டினம் காவற் பொருட்டே             (10)