455காதம் பலவும் திரிந்து உழன்றேற்கு அங்கு ஓர்
      நிழல் இல்லை நீர் இல்லை உன்
பாத நிழல் அல்லால் மற்றோர் உயிர்ப்பிடம்
      நான் எங்கும் காண்கின்றிலேன்
தூது சென்றாய் குரு பாண்டவர்க்காய் அங்கு ஓர்
      பொய்ச்சுற்றம் பேசிச் சென்று
பேதம் செய்து எங்கும் பிணம்படுத்தாய் திரு
      மாலிருஞ் சோலை எந்தாய்             (4)