457எருத்துக் கொடி உடையானும் பிரமனும்
      இந்திரனும் மற்றும்
ஒருத்தரும் இப் பிறவி என்னும் நோய்க்கு
      மருந்து அறிவாரும் இல்லை
மருத்துவனாய் நின்ற மா மணிவண்ணா
      மறு பிறவி தவிரத்
திருத்தி உன் கோயிற் கடைப் புகப் பெய் திரு
      மாலிருஞ் சோலை எந்தாய் (6)