460அன்று வயிற்றிற் கிடந்திருந்தே அடி
      மை செய்யல் உற்றிருப்பன்
இன்று வந்து இங்கு உன்னைக் கண்டுகொண்டேன் இனிப்
      போக விடுவதுண்டே?
சென்று அங்கு வாணனை ஆயிரம் தோளும்
      திருச் சக்கரம் அதனால்
தென்றித் திசை திசை வீழச் செற்றாய் திரு
      மாலிருஞ் சோலை எந்தாய்             (9)