475 | ஓங்கி உலகு அளந்த உத்தமன் பேர் பாடி நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீர் ஆடினால் தீங்கு இன்றி நாடு எல்லாம் திங்கள் மும்மாரி பெய்து ஒங்கு பெருஞ் செந்நெலூடு கயல் உகளப் பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத் தேங்காதே புக்கு இருந்து சீர்த்த முலை பற்றி வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளற் பெரும் பசுக்கள் நீங்காத செல்வம் நிறைந்து- ஏலோர் எம்பாவாய் (3) |
|