477மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்
      தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி-விளக்கைத்
      தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது
  வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
      தீயினில் தூசு ஆகும் செப்பு-ஏலோர் எம்பாவாய்             (5)