478புள்ளும் சிலம்பின காண் புள்-அரையன் கோயிலில்
      வெள்ளை விளி சங்கின் பேர்-அரவம் கேட்டிலையோ?
பிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சு உண்டு
      கள்ளச் சகடம் கலக்கு அழியக் கால் ஓச்சி
வெள்ளத்து அரவிற் துயில் அமர்ந்த வித்தினை
      உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரி என்ற பேர்-அரவம்
      உள்ளம் புகுந்து குளிர்ந்து-ஏலோர் எம்பாவாய்             (6)