479 | கீசு கீசு என்று எங்கும் ஆனைச்சாத்தன் கலந்து பேசின பேச்சு- அரவம் கேட்டிலையோ? பேய்ப் பெண்ணே காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து வாச நறுங் குழல் ஆய்ச்சியர் மத்தினால் ஓசை படுத்த தயிர்-அரவம் கேட்டிலையோ? நாயகப் பெண்பிள்ளாய் நாராயணன்மூர்த்தி கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ? தேசம் உடையாய் திற-ஏலோர் எம்பாவாய் (7) |
|