493ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீது அளிப்ப
      மாற்றாதே பால் சொரியும் வள்ளற் பெரும் பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்
      ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே துயில் எழாய்
      மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசற்கண்
ஆற்றாது வந்து உன் அடிபணியுமா போலே
      போற்றி யாம் வந்தோம் புகழ்ந்து-ஏலோர் எம்பாவாய்            (21)