494 | அங்கண் மா ஞாலத்து அரசர் அபிமான பங்கமாய் வந்து நின் பள்ளிக்கட்டிற் கீழே சங்கம் இருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம் கிங்கிணிவாய்ச் செய்த தாமரைப் பூப் போலே செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ? திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல் அங்கண் இரண்டும் கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல் எங்கள்மேல் சாபம் இழிந்து-ஏலோர் எம்பாவாய் (22) |
|