497ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில்
      ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கிலான் ஆகித் தான் தீங்கு நினைந்த
      கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பு என்ன நின்ற நெடுமாலே உன்னை
      அருத்தித்து வந்தோம் பறை தருதி யாகில்
திருத் தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி
      வருத்தமுந் தீர்ந்து மகிழ்ந்து-ஏலோர் எம்பாவாய்            (25)