5எந்தை தந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன்
      ஏழ்படிகால் தொடங்கி
வந்து வழிவழி ஆட்செய்கின்றோம் திரு
      வோணத் திருவிழவில்
அந்தியம் போதில் அரியுரு ஆகி
      அரியை அழித்தவனைப்
பந்தனை தீரப் பல்லாண்டு பல்லாயிரத்
      தாண்டு என்று பாடுதுமே             (5)